மேம்பால தடுப்பு சுவற்றில் மோதி தொழிலாளி பலி


மேம்பால தடுப்பு சுவற்றில் மோதி தொழிலாளி பலி
x

மேம்பால தடுப்பு சுவற்றில் மோதி தொழிலாளி பலி

திருப்பூர்

திருப்பூர்

அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 52). இவர் திருப்பூரில் பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் புஷ்பா ரவுண்டானாவில் இருந்து ரெயில்வே மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின் மேல் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்தது. இதில் சாலையோரம் இருந்த தடுப்பில் கந்தசாமியின் தலை பயங்கரமாக மோதியது.

தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது இதனால் தலை உடைந்து ரத்தம் கொட்டியதால் கந்தசாமி மயங்கினார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஆம்புலன்சு விரைந்து வந்து கந்தசாமியை ஊழியர்கள் பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தலையின் பின்புறம் பலத்த காயம் காணப்பட்டது. பின்னர் பிணத்தை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள அவினாசி ரோடு மேம்பாலத்தில் விபத்து நடந்ததால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

-


Next Story