மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு


மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு
x

மானூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது.

திருநெல்வேலி

மானூர்:

மேலப்பாளையம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் தயாள் மகன் டேவிட் (வயது 23). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் மானூர் அருகே கம்மாளங்குளத்தில் உள்ள தனது கல்லூரி நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை அவரது வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு இரவு தங்கினார். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக மானூர் போலீசில் டேவிட் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story