மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு


மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:17:20+05:30)

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் பூபதி (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணிடைட்டஸ் தரப்பினருக்கும் புரோட்டா கடையில் வைத்து தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்தோணி டைட்டஸ் தனது நண்பர்களுடன் மகேஷ்பூபதியை தேடி வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். இதனை பார்த்த மகேஷ் பூபதி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

மோட்டார் சைக்கிள்

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி டைட்டஸ் உள்ளிட்ட 5 பேர் கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தின்னரை ஊற்றி தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இதுகுறித்து மகேஷ் பூபதி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story