மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்; 13 பேர் படுகாயம்
புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்
புதுப்பேட்டை
புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆட்டோ கவிழ்ந்தது
புதுப்பேட்டை அடுத்துள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜெயக்குமார்(வயது 22). இவர் தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டை -அரசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அம்மாபேட்டை என்கிற இடத்தில் வந்தபோது ஜெயக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது.
13 பேர் படுகாயம்
இதில் ஜெயக்குமார் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி கஸ்தூரி(42), குணசேகரன் மனைவி சத்தியபாமா(40), குப்புசாமி மனைவி சின்ன பொண்ணு(55), மணிமேகலை(45), லதா(60), அரசம்மாள்(65), வீரம்மாள்(60), பழனியம்மாள்(38), ராதா(35), நீலகண்டன்(51), சிவம்(51), சாந்தி(47) ஆகிய 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு ஜெயக்குமாரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
டிரைவர் மீது வழக்கு
இது குறித்த புகாரின் பேரில் ஆணைவாரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரபாண்டியன் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.