மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தம்பதி பலி


மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தம்பதி பலி
x
தினத்தந்தி 9 May 2023 6:15 AM IST (Updated: 9 May 2023 6:16 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி பலியாகினர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி பலியாகினர்.

விபத்து

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மழுக்குபாறை பகுதியை சேர்ந்தவர் பால்துரை (வயது 42). இவருடைய மனைவி ஆஷா (40). இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சுல்தான்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பால்துரை, ஆஷா இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் பலி

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கணவன், மனைவி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பால்துரை இறந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஷாவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆஷா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story