கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் காயம்


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் காயம்
x

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

நச்சலூர் அருகே உள்ள கீழ நங்கவரம் தமிழ்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (25). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (22). இந்தநிலையில் நேற்று பார்த்திபன், விஜயராகவன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பெருகமணியில் இருந்து நங்கவரம் செல்லும் சாலையில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நங்கவரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்து நின்றது. இதனால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பார்த்திபன், விஜயராகவன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், கார் டிரைவர் வெண்ைணமலை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story