கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


கயத்தாறு அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

கயத்தாறு அருகே, மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். பெண் காயம் அடைந்தார்

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே, மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். பெண் காயம் அடைந்தார்.

வாலிபர்

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பரமசிவம் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். பரமசிவம் ஓரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் இவர் வெளியில் சென்று விட்டு தெற்கு இலந்தைகுளம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

விபத்தில் பலி

அப்போது கழுகுமலை அங்கன்வாடியில் பணிபுரியும் ஹலிமா பீவி (40) என்பவர் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விட்டு கழுகுமலைக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

தெற்குஇலந்தைகுளம் கிராமம் அருகே 2 மோட்டார்சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்தில் பலியானார்.

ஹலிமா பீவி காயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் சம்பவ இடத்துக்கு சென்று பரமசிவத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இறந்துபோன பரமசிவத்திற்கு மாலதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story