காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்


காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்
x

காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோததியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன், ராஜா, பாஸ்கர் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் பொம்மனப்பாடியிலிருந்து சிறுவாச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வடக்கு மலை வனப்பகுதியிலிருந்து காட்டுப்பன்றி ஒன்று எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே ஓடி வந்தது. அப்போது காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் அந்த பன்றி இறந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பலியான காட்டுப்பன்றியை வனத்துறையினர் கைப்பற்றி வனப்பகுதியில் புதைத்தனர்.


Next Story