பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 4 பேர் படுகாயம்


பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 4 பேர் படுகாயம்
x

ஒண்ணுபுரம் கூட்ரோட்டில் பஸ் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 4 போ் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் ஒண்ணுபுரம் கூட்ரோடு பகுதியில் வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆகாஷ், தனுஷ், சங்கர், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்ணாங்குளம் ஒண்ணுபுரம் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதால் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story