மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலியானார்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், ஜூலை.23-

லால்குடி அருகே உள்ள பல்லபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஜீவகன் (வயது 34). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சமயபுரம் வந்துகொண்டிருந்தார். சிதம்பரம் - சமயபுரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பனமங்கலம் அருகே பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story