சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது: தலை துண்டாகி என்ஜினீயர் பலி
பெங்களூருவில் நேர்முக தேர்வில் பங்கேற்று திரும்பியபோது சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் டிப்ளமோ என்ஜினீயர் தலை துண்டாகி பலியானார்.
கோவில்பட்டி,
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அஜித் (வயது 25), டிப்ளமோ என்ஜினீயர். இவர் வேலைக்காக பெங்களூருவில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு நேர்முக தேர்வில் பங்கேற்றுவிட்டு, அதே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டார்.
தலை துண்டாகி பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அஜித் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அஜித் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Related Tags :
Next Story