மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

ஆம்பூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த மேல்மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் (வயது 28). கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ரகுநாதபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள பனைமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் செந்தமிழுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள், செந்தமிழ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சென்று செந்தமிழ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story