மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சாலையின் குறுக்கே மான் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரமடை
சாலையின் குறுக்கே மான் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒரே மோட்டார் சைக்கிளில்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியை சேய்தவர் சண்முகம். இவரது மகன் மிதுன்(வயது 21). இவர் தனது நண்பர்களான நிதின்குமார்(21), சந்துரு(21) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் கணுவாய்பாளையத்தில் இருந்து பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை சந்துரு ஓட்டினார். யானைகள் முகாம் அருகே சென்றபோது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது.
செல்லும் வழியிலேயே...
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்துரு பிரேக் பிடித்து மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தின் மீது மோதி கவிழந்தது.
இந்த விபத்தில் சந்துரு உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மிதுனை மேல் சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






