மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி
x

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48), விவசாயி. இவர் நேற்று தனது மனைவி சுந்தரம்மாளுடன் (40) கீழப்புலியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தம்பை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது வெங்கடேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த குன்னம் தாலுகா நமையூரை சேர்ந்த மகேந்திரன் மகன் நிஷாந்த் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதியக்கொண்டன. இந்த விபத்தில் வெங்கடேசன், சுந்தரம்மாள், நிஷாந்த் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுந்தரம்மாள், நிஷாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story