சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு.
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு.
திருப்பூர்
அவினாசி
அவினாசியை அடுத்து செம்பாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்கிட்டப்பன் (77) கடந்த 18ம் தேதி சைக்கிளில் வந்த இவர்அவினாசி பட்டரை பஸ்டாப் அருகே ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிட்டப்பனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கிட்டப்பன் உயிரிழந்தார். இது குறித்து அவனாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story