மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்; விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்; விவசாயி சாவு
x

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளும், மினிலாரியும் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளும், மினிலாரியும் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விபத்து

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது52). விவசாயி. இவர் நேற்று பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் துவரங்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து, படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தகவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து அவருடைய மனைவி மீனாட்சி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story