பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி


பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
x

பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

திருச்சி மாவட்டம் திருவையூர் கொப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சக்திவேலு (வயது 27). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கே.புதுப்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார் கோவில் பகுதியில் சாலையில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில், பலத்த காயம் அடைந்த சக்திவேலுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேலு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்திற்கு காரணமான கட்டுமான மேற்பார்வையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story