மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து லிப்ட் ஆபரேட்டர் பலி


மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து லிப்ட் ஆபரேட்டர் பலி
x

மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து லிப்ட் ஆபரேட்டர் பலியானார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே சித்தலவாய் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவரது மகன் சபரி என்கிற சபரிநாதன் (27). இவர் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் வேலாயுதம்பாளையத்தில் உள்ள உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு சபரிநாதன் தனது மோட்டார் சைக்கிளில் சித்தலவாயில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புகழூர்-வேலாயுதம்பாளையம் சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சபரிநாதன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story