கருங்கல் அருகேமோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்புபோலீசார் விசாரணை


கருங்கல் அருகேமோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்புபோலீசார் விசாரணை
x

கருங்கல் அருகேமோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு தோரணவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மகேஷ் (வயது 20). சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சர் ஆனது. இதனால், மகேஷ் மோட்டார் சைக்கிளை சாலையோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் பஞ்சர் ஒட்டுவதற்காக ஊழியருடன் மோட்டார் சைக்கிளை வந்து பார்த்தார். அப்போது, மகேசின் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்த நிலையில் காணப்பட்டது. இதைக்கண்டு மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தது தெரிந்தது. பின்னர் இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story