மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நிலக்கோட்டையை சேர்ந்த சந்தோஷ் (வயது 19) மற்றும் 14 வயது சிறுவன் என்பதும், திண்டுக்கல் செயின்ட் சேவியர் தெருவில் மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் வடக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story