திண்டிவனம், செஞ்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


திண்டிவனம், செஞ்சி பகுதியில்  மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

திண்டிவனம், செஞ்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்கும் வகையில், திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், தமிழ்மணி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருபவர்களை தேடி வந்தனர்.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சீர்பாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் வினோத் (வயது 21) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரி அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் உள்பட செஞ்சி, விக்கிரவாண்டி பகுதியில் 10 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து வினோத்தை ரோசனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story