மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கோமதியாபுரம் பகுதியில் தோசை கடை நடத்தி வருபவர் பழனி மகன் முனியசாமி (வயது 47). இவரது வீடு சங்கரன்கோவில் முல்லை நகரில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய முனியசாமி வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

நேற்று காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீஸ் நிலையத்தில் முனியசாமி புகார் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.



Next Story