தனியார் நிறுவன மேலாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு 2 வாலிபர்கள் கைது


தனியார் நிறுவன மேலாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு  2 வாலிபர்கள் கைது
x

தனியார் நிறுவன மேலாளரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது தொடா்பாக 2 வாலிபர்களை போலீசாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நுணையவாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் மகன் கந்தவேல் (வயது 40). இவர் உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

சம்பவத்தன்று கந்தவேல் தனது மோட்டார் சைக்கிளை அலுவலகத்தின் முன்பு நிறுத்தியிருந்தார். அதை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கந்தவேல் பார்த்தார். அப்போது, 2 பேர் திருடி செல்வது அதில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து அவர் உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவானவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், உளுந்தூர்பேட்டை துர்கா நகரை சேர்ந்த அரவிந்த்சாமி (வயது 25), வி.கே.எஸ். கார்டன் அருள் பாண்டியன்( 31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story