மோட்டார் சைக்கிள் திருட்டு
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
மதுரை
திருமங்கலம்,
திருமங்கலம் மவுலானா ஆசாத் தெரு அப்துல்காதர் என்பவர் மகன் முகமது காசிம். இவர் திரளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு தனது ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story