மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

கரூர்

லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் ரெயில்வே பிரிட்ஜ் அருகே சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதிகாலையில் பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story