மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே குருகாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). திசையன்விளை பஸ் நிலையம் எதிரில் சாலையோர பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த அப்புவிளை மேலத்தெருவை சேர்ந்த ராஜேஷ் ஆனந்த் (47) என்பவர் திருடி சென்றுவிட்டதாக திசையன்விளை போலீசில் கணேசன் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் ஆனந்தை தேடி வருகிறார்.


Next Story