மோட்டார் சைக்கிள் திருட்டு
சங்கராபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் இந்திரா நகரை சேர்ந்த சத்தார் சாயபு மகன் முகமதுயாசின்(வயது 53). இவர் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபம் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு டீ வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இது குறித்து முகமது யாசின் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story