சரவணம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
சரவணம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
கோயம்புத்தூர்
சரவணம்பட்டி
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் நித்திஷ் (வயது 24). இவர் சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். மதியம் 2 மணிக்கு உணவு வாங்க வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story