மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

சங்கரன்கோவிலை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் செல்வம் (வயது 20). இவர் கடந்த 4-ந் தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது, தனது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஸ்ரீராம் (28) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் ஸ்ரீராமை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story