மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

சுத்தமல்லியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுரேஷ் (வயது 23.) இவர் தனது வீட்டு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடியதாக நெல்லை அருகே உள்ள பாலாமடை மேலத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சுடலைமுத்து (32) என்பவரை கைது செய்தனர்.


Next Story