மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் பாளையங்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3-ந்தேதி இரவு ஆரோக்கியம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடியதாக ராமையன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிராஜா (வயது 20) என்பவரை கைது செய்தார்.


Next Story