திருக்கோவிலூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
திருக்கோவிலூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் வெண்மதி(வயது 30). இவர் நேற்று திருக்கோவிலூர் வடக்கு தெருவில் உள்ள தனியார் வங்கியின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அவா் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்டித்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் போளுரை சேர்ந்த பழனி(வயது 53) என்பதும், இவர் வெண்மதியின் மோட்டார் சைக்கிளை திருடி எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பழனியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.