மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்


மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
x

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் திருடியவர் போலீசாரிடம் சிக்கினார்.

நாமக்கல்

மோட்டாா் சைக்கிள் திருட்டு

நாமக்கல் மாவட்டம் பொம்மசமுத்திரம் அருகே உள்ள பெருமாப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் வினோத்குமார் (வயது 33). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி மதியம் நாமக்கல்லில் உள்ள துறையூர் சாலையில் இருக்கும் மருந்துக்கடைக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர் இரவு அங்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வினோத்குமார் நாமக்கல் போலீசில் புகார் அளித்்தார்.

போலீசில் சிக்கினார்

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

அதில் பெரம்பலூரை சேர்ந்த ஹரிஹரன் (47) என்பவர் கள்ளச்சாவியை போட்டு வினோத்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. அதன் பிறகு ஹரிஹரனை கைது செய்ததோடு, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story