ேமாட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
ேமாட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
நெகமம்
நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் நெகமம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்குள்ள் வணிக வளாகத்தில் பொருட்களை வாங்க சென்றார். பின்னர் மீண்டும் அங்கு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து சந்தோஷ் நெகமம் போலீசில் புகார் அளிதார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நெகமம் போலீசார் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது வெள்ளாளபாளையம் பிரிவு அருகே போலீசாரை கண்டதும் ஒருவர் ஓட முயன்றார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் நெகமம் அருகே கணக்கம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் என்பதும், சந்தோசின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.