மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்


மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
x

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் போலீசாரிடம் சிக்கினார்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

நெல்லை மாநகர பகுதியில் பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, பழையபேட்டை, சமாதானபுரம், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் உள்ள பொருட்களை திருடுவது உள்ளிட்ட சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. இதில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடைபெற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story