மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; முதியவர் பலி
பொன்னமராவதி அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் ேநருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். மனைவி-மகன் படுகாயமடைந்தனர்.
முதியவர் பலி
அன்னவாசல் அருகே குடுமியான்மலையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி வளர்மதி (53). இவர்களது மகன் துளசிமணி. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் குடுமியான்மலையில் இருந்து பொன்னமராவதிக்கு வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை துளசிமணி ஓட்டினார். பொன்னமராவதி அருகே ஆலவயல் பிரிவு சாலையில் வந்த போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியும், துளசிமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மனைவி-மகன் படுகாயம்
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த வளர்மதி, துளசிமணி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த பொன்னமராவதி போலீசார் சண்முகம் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.