மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பாட்டி, பேரன் பலி
மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பாட்டி, பேரன் பலியானாா்கள்.
விழுப்புரம்
மேல்மலையனூர் அருகே காரணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரகமத்துல்லா மகன் உமர் பாஷா (வயது 20). இவரது பாட்டி ஆயிஷா(75). இருவரும் நேற்று முன்தினம் இரவு நீலாம்பூண்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, செல்லபிராட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆயிஷா, உமர் பாஷா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஆயிஷா, உமர் பாஷா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story