குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் இருந்து நாகல்குழி செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த சாலை குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வெளியூர் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story