குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை
ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரத்திலிருந்து பிராந்தனி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து உள்ளதால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story