சாலையில் சிதறி கிடந்த மதுபாட்டில்களால் வாகன ஓட்டிகள் அவதி
ஜெயங்கொண்டம் அருகே சாலையில் சிதறி கிடந்த மதுபாட்டில்களால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் (தா.பழூர்) செல்லும் சாலையில் தனியார் கல்லூரி அருகே சாலையில் சிதறி கிடந்த மது பாட்டில்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் அவர்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி நொறுங்கி கிடந்த காலி மதுபாட்டில்களில் பெரிய சைஸ் உள்ள சில்லிகளை எடுத்து அப்புறப்படுத்தி விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யாரேனும் மர்ம நபர்களால் மதுபாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்குமா? அல்லது லாரியில் லோடு ஏற்றி செல்லும் போது தவறி விழுந்து உடைந்திருக்குமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story