சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி


சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 12 July 2023 4:15 AM IST (Updated: 12 July 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வால்பாறை உள்ளது. இங்குள்ள பச்சைபசேலென காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், கூழாங்கல் ஆறு, சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சி, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வால்பாறை நகர் பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்த நிலையில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் திடீரென வாகனங்களின் குறுக்கே ஓடிவருவதால் 2 சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. வால்பாறை பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நிழற்குடை அசுத்தம்

இதுதவிர சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் இரவு நேரங்களில் பஸ் நிலையங்கள், பயணிகள் நிழற்குடைகளுக்குள் சென்று படுத்து தூங்குகின்றன. அப்போது அங்கு அசுத்தும் செய்துவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் துர்நாற்றத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனர். பயணிகள் நிழற்குடை இருந்தும் பயணிகள் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தினந்தோறும் பயணிகள் நிழற்குடை, பஸ் நியைத்தை சுத்தம் செய்வதே தூய்மை பணியாளர்களுக்கு வேலையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக பலமுறை கால்நடை வளர்ப்போர்களுடன் நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தியும் எந்தவித அக்கறையும் எடுக்காமல் உள்ளனர்.

எனவே இதுகுறித்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்நடைகளால் எற்படும் விபத்தை தடுக்க வால்பாறை போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story