இரும்பு தடுப்புகளை அகற்றிய வாகன ஓட்டிகள்


இரும்பு தடுப்புகளை அகற்றிய வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் இரும்பு தடுப்புகளை வாகன ஓட்டிகள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் இரும்பு தடுப்புகளை வாகன ஓட்டிகள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு வழிச்சாலை

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையின் இருபுறமும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள், சில நேரங்களில் நான்கு வழிச்சாலையை கடக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு வசதியாக 2½ கிலோ மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே நான்கு வழிச்சாலையின் நடுவில் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இரும்பு தடுப்புகள்

இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வரும்போது, அந்த பிரிவு வழியாக கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் மீது ேமாதி விபத்தை ஏற்படுத்தும் நிலை இருந்தது.

இதை தவிர்க்க கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நான்கு வழிச்சாலையை ஆய்வு செய்து, முதற்கட்டமாக ஏழூர் பிரிவு, கோவில்பாளையம் சேரன்நகர், மேட்டுப்பாளையம் பிரிவு, தாமரைக்குளம், கோதவாடி பிரிவு உள்ளிட்ட இடங்களில் இரும்பு தடுப்புகளை வைத்தனர். இதனால் அந்த பகுதிகளில் விபத்துகள் குறைந்தது.

கடும் நடவடிக்கை

தற்போது அந்த இரும்பு தடுப்புகளை பல இடங்களில் வாகன ஓட்டிகள் சிலர் இழுத்துச்சென்று, சாலையோரத்தில் போட்டு வைத்துள்ளனர்.

இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்களில் வேகம் அதிகரிக்கிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், நான்கு வழி சாலையில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை இரவு நேரங்களில் சிலர் இழுத்துச்சென்று சாலையோரம் வைத்து விடுகின்றனர். அவர்கள் குறித்து விசாரிக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story