மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே புதிய ரெயில் பெட்டிகளுடன் மலைரெயில் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே புதிய ரெயில் பெட்டிகளுடன் மலைரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
குன்னூர்
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே புதிய ரெயில் பெட்டிகளுடன் மலைரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
மலை ரெயில்
நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக மலை ரெயில் இடம் பெறுகிறது. பாரம்பரிய சின்னமாக மலை ரெயில் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் குனனூர் முதல் கல்லார் வரை ரெயிலின் பாதுகாப்பிற்காக பினியன் சிஸ்டம் என்று கூறப்படும் பல் சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தில் பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி என்ஜின் மூலம் 4 பெட்டிகளுடன் மலை ரெயில் இயக்கப்படுகிறது
ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி மலை ெரயில் மேம்பாட்டுக்காக, மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவின் பேரில் ரெயில்வே வாரியம், நிதி ஒதுக்கி பர்னஸ் ஆயில் மற்றும், டீசல் என இரு புதிய என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. மேலும் 28 ரெயில் பெட்டிகள் கடந்த ஓராண்டிற்கு முன்பு தயாரிக்கப்பட்டன.
சோதனை ஓட்டம்
இவற்றில் மலை ரெயில் என்ஜின்கள் சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. இந்தநிலையில் ரெயில் பெட்டிகளுக்கான வெள்ளோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரத்தில் இயங்கும் மலை ெரயிலுக்கான 4 புதிய பெட்டிகளின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. வெள்ளோட்டத்தின் போது பெட்டிகளின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த பொறியாளர்கள் பெட்டியின் எடைக்கு ஏற்றவாறு பல்சக்கரத்தில் பெட்டிகள் இயங்கும் விதம் குறித்து ஆய்வு செய்தனர்.
விரைவில் இந்த பெட்டிகள் குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே சுற்றுலா பயணிகளுக்காக பயன்பாட்டுக்கு வர உள்ளது.