முயற்சி இருந்தால் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்


முயற்சி இருந்தால் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்
x

முயற்சி இருந்தால் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி

முயற்சி இருந்தால் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

நிறைவு விழா

தூத்துக்குடியில் ஆகாயத்தாமரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சி நிறைவு விழா நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். எச்.டி.எப்.சி. வங்கி துணைத்தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முயற்சி

விழாவில் கனிமொழி எம்.பி. பேசும்போது, ஆகாய தாமரையில் அழகிய பொருட்களை செய்வதற்கு பெண்கள், அத்தனை போராட்டங்களையும் தாண்டி ஆர்வத்துடன் பயிற்சி பெற்று உள்ளீர்கள். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளும், பெண்களும் ஆர்வத்துடன் செயல்பட்டீர்கள்.

அழகான பொருட்களை அர்ப்பணிப்புடன் செய்து உள்ளீர்கள். உங்களையும், உங்களை ஒருங்கிணைத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தயாரிக்கும் பொருட்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. உங்களிடம் ஆர்வம் உள்ளது. முயற்சி இருந்தால் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். கூடுதல் பயிற்சி அளிக்கவும், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான உதவிகளை செய்யவும் தயாராக இருக்கிறோம். உலகம் முழுவதும் தூத்துக்குடியில் இருந்து கைவினை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும். அந்த நிலையை உருவாக்க வேண்டும், என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கிரியேட்டிவ் பீ நிறுவன தலைமை அலுவலர் பீனா ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் திட்டம் திட்ட இணை இயக்குனர் வீரபத்திரன் நன்றி கூறினார்.

முன்னதாக ஆகாயத்தாமரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகிய கைவினை பொருட்களை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story