வேடசந்தூரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்ட எம்.பி.


வேடசந்தூரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்ட எம்.பி.
x

வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி, ரங்கநாதபுரம், காசிபாளையம் ஆகிய கிராமங்களில் கரூர் எம்.பி. ஜோதிமணி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

திண்டுக்கல்

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி, ரங்கநாதபுரம், காசிபாளையம் ஆகிய கிராமங்களில் கரூர் எம்.பி. ஜோதிமணி காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பாகும் வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பெரியசாமி, மூர்த்தி, வட்டார பொருளாளர் பகவான், மாவட்ட பிரதிநிதிகள் ராஜன், அரசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கமலை, வடமதுரை வட்டார தலைவர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story