பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய எம்.பி.


பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய எம்.பி.
x
தினத்தந்தி 28 Sep 2023 12:45 AM GMT (Updated: 28 Sep 2023 12:45 AM GMT)

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற முகாமில் வேலுச்சாமி எம்.பி. கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திண்டுக்கல்

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 21 ஊராட்சிகளில் கோரிக்கை மனுக்கள் வாங்கும் முகாம் நேற்று நடந்தது. அதன்படி திம்மணநல்லூர் ஊராட்சி ராமராஜபுரத்தில் நடந்த முகாமுக்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். இதில் வேலுச்சாமி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் அவர் பேசுகையில், கலைஞரின் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் இந்தியாவே போற்றும் சிறப்பான திட்டம் ஆகும். இதில் தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பித்து உரிமைத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் 100 சதவீத தீர்வு காணப்படும் என்றார்.

சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தர்மராஜன், மோகன், மாவட்ட கவுன்சிலர் லலிதா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணை தலைவர் ராம்தாஸ், நத்தம் பேரூராட்சி தலைவர் பாட்ஷா, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா, அருள்கலாவதி, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் வில்சன், தனித்தாசில்தார் சுகந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் நடந்த முகாம்களில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.


Next Story