திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
x

திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

திருவாரூர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையினை உடனடியாக கைவிட வேண்டும். ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் குமரன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் விஜய், ஒருங்கிணைப்பாளர் நடராஜன், கவுரவ விரிவுரையாளர்கள் உதயசங்கர், சத்தியா, சுபா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story