முகையூர் ஒன்றியக்குழு கூட்டம்


முகையூர் ஒன்றியக்குழு கூட்டம்
x

முகையூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் மணம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணம்பூண்டி பி.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவைப்படும் வளர்ச்சி பணிகளை கோரிக்கையாக முன்வைத்து பேசினர். உறுப்பினர்களின் கோரிக்கையை கேட்டறிந்த ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், அவசர, அவசிய தேவையை கருத்தில்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். தொடர்ந்து உறுப்பினர்களின் வாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால்கள், குடிநீர் பணிகள், தடுப்பு சுவர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ் நன்றி கூறினார்.

1 More update

Next Story