முக்காணி ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடைவிழா


முக்காணி ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடைவிழா
x

முக்காணி ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

முக்காணி குருவித்துறை ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா முக்காணி யாதவர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது. முதல்நாளில் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் கோவிலில் கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் யானை ஊர்வலத்துடன் தாமிரபரணி ஆற்றில் இருந்து அம்பாளுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வர மேளதாளத்துடன் ரத வீதி வலம் வருதலும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், உச்சிகால பூஜையும் நடைபெற்றது.

மாலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்பாளுக்கு மேளதாளத்துடன் திருமஞ்சன வீதி வலம் நடந்தது.

இரவு 12 மணியளவில் அம்பாளுக்கு அலங்காரம் சிறப்பு தீபாராதனை, வாணவேடிக்கையும், அதனைத் தொடர்ந்து அம்பாள் இரவு ஒரு மணி அளவில் நகர்வலம் வருதல் நடைபெற்றது. நேற்று காலையில் அம்பாள் மஞ்சள் நீராடி மேல தாளத்துடன் வீதி வலம் நடந்தது.

விழா நாட்களில் தினமும் இரவு பட்டிமன்றம், பக்தி சொற்பொழிவு, திரைப்பட கச்சேரி, வாணவேடிக்கை, கரகாட்டம், வில்லிசை ஆகியவை நடைபெற்றது.


Next Story