முத்தாரம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி


முத்தாரம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடிகொடை விழாவை முன்னிட்டு முத்தராம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர்
கோவை


ஆடிகொடை விழாவை முன்னிட்டு முத்தராம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கணபதி பூஜை


கோவை சங்கனூர்-நல்லம்பாளையம் ரோட்டில் ஞானமூர்த்தீஸ் வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி 20-ம் ஆண்டு கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


முகூர்த்தகால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் சூழ முகூர்த்த கால் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


திருவிளக்கு பூஜை


வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு 501 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. 31-ந் தேதி இரவு வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் அம்மனுக்கு குடியழைப்பு பூஜை மற்றும் மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.


அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதிய கொடை விழா மற்றும் அம்மன் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் அழைப்பு நடக்கும். அன்று இரவு 12 மணிக்கு சாம கொடை விழா மற்றும் வான வேடிக்கை நடக்கிறது. 2-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.



Next Story